ஐபிஎல் தொடர்ல விளையாடுவீங்க… இந்தியாவிற்காக விளையாட மாட்டீங்களா..? இந்திய வீரர்களை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர் !!

பனிச்சுமையை குறைப்பதற்காக சீனியர் வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுத்து வரும் பிசிசிஐ.,யின் முடிவை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பனிச்சுமையை குறைக்கிறோம் என்ற பெயரில் பிசிசிஐ., இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் எப்போதாவது தான் ஒரு சில சீனியர் வீரர்களுக்கு, ஓரிரு தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படும், ஆனால் சமீபத்தில் ஒவ்வொரு தொடரிலும் யாருக்காவது பிசிசிஐ., ஓய்வு கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது.

குறிப்பாக டி.20 போட்டிகளில் விராட் கோலி, பும்ராஹ், ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. சில வீரர்கள் தாங்களாகவே தங்களுக்கு ஓய்வு தேவை என கேட்டு வாங்குவதும் சமீபகாலமாக அதிகமாக நடைபெற்று வருகிறது. சீனியர் வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுப்பதால் இந்திய அணிக்கு எவ்வித பயனும் ஏற்படாது என முன்னாள் வீரர்கள் பலர் பிசிசிஐ.,யின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கரும், சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் முறையை மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “சீனியர் வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படுவது ஏன் என எனக்கு சுத்தமாக புரியவில்லை. ஐபிஎல் தொடர் முழுவதும் அவர்களால் ஓய்வு இல்லாமல் விளையாட முடிகிறது, ஆனால் இந்திய அணிக்காக விளையாட முடிவது இல்லை. ஐபிஎல் தொடரை விட இந்திய அணிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் தொடருக்கே முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. வெறும் 20 ஓவர்களை கொண்ட டி.20 போட்டிகளில் விளையாடுவதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்பட்டுவிடாது. டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கிரிக்கெட் வீரர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனையை ஏற்படுத்தும். இந்திய வீரர்களுக்கு அதிகமான சம்பளம் தான் வழங்கப்படுகிறது, இந்திய அணிக்காக விளையாடுவதற்காக மட்டுமே ஒப்பந்தம் போடப்படுகிறது, அதை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிசிசிஐ.,யும் இந்த தேவையற்ற முறைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.