நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விதிமுறைக்கு எதிராக செயல்பட்டதால் ஸ்டூவர்ட் பிராட் ஐசிசியின் விதிமுறை தண்டிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.
பலம் வாய்ந்த பென்ஸ்டோக் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தடுமாறிய நியூசிலாந்து அணி மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவியது, இதனால் இங்கிலாந்து அணி 3-0 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி வீரர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது கிரீஸில் இருந்த டேரில் மிட்சல் ரன் எடுப்பதற்கு முயற்சி கூட செய்யவில்லை, ஆனால் ஸ்டூவர்ட் பிராட் கோபமாக பந்தை மிச்செலின் பக்கத்தில் எறிந்தார். இது ஐசிசியின் (Article2.9) விதிப்படி தண்டனைக்குரிய குற்றமாகும், இதனால் அப்போது உடனே கள நடுவர்கள் தலையிட்டு ஸ்டூவர்ட் பிராட்டிர்க்கு டிமெரிட் பாயிண்ட் கொடுத்தனர்.இது ஸ்டூவர்ட் பிராட் பெற்ற இரண்டாவது டிமெரிட் பாய்ன்ட் ஆகும்.
(Article 2.9-ஒரு வீரருக்கு அருகில் தகாத முறையில் அல்லது காயம் ஏற்படும் வகையிலோ பந்தை எறிவது ஐசிசி முறைப்படி தவறு)
இதற்கு முன் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஸ்டூவர்ட் பிராட் தகாத வார்த்தையை பயன்படுத்தி ஒரு டிமெரிட் பாய்ன்ட் பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் பெற்றிருக்கிறார்.
ஒருவீர் 24 மாதங்களுக்குள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட டிமெரிட் பாய்ன்ட் பெற்றால் ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு லிமிடெட் ஒரு போட்டிகளில் இருந்து தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.