ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் தற்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும்பலப்பரீச்சை மேற்கொள்கின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து அணி இதற்கு முன் மூன்று முறை இறுதிப்போட்டிவரை சென்று தோல்வியை தழுவியுள்ளது. அடுத்தடுத்து இருமுறை இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது நியூசிலாந்து அணி. இன்றைய போட்டியை வென்று கோப்பையை பெரும் அணிக்கு இதுவே முதல் கோப்பையாகும்.
இங்கிலாந்து அணி வீரர்களின் விவரம்
ஆஸ்திரேலியா உடன் அரையிறுதியில் மோதிய அதே படை இன்றைய போட்டியிலும் எவ்வித மாற்றமும் இன்றி களமிறங்குகிறது.
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட்
நியூசிலாந்து அணி வீரர்களின் விவரம்
அரையிறுதியில் இந்தியாவுடன் மோதிய அதே படை இன்றும் களமிறங்குகிறது. அணியில் எவ்வித மாற்றமும் இல்லை.
மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன்
இறுதிப்போட்டி-லாட்ஸ் மைதானத்தின் வானிலை அறிக்கை
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. லாட்ஸில் நாள் முழுவதும் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வெப்பநிலை அதிகபட்சமாக 21℃, குறைந்த பட்சம் 16℃ ஆக இருக்கும்.