விண்டீஸ் அணியுடனான முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் அதிரடிநீக்கம் !!

விண்டீஸ் அணியுடனான முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் அதிரடிநீக்கம்

விண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்றே அறிவித்துள்ளது.

கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு மத்தியில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி வரும் 8ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஜோ ரூட் இல்லாததால் அவருக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வழிநடத்த உள்ளார்.

மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஜோ ரூட் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. அதே போல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பேர்ஸ்டோவ் மோசமான ஃபார்ம் காரணமாக இந்த தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது உடல்நிலை மோசம் காரணமாக விலகிய ஜேக் லீச் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் மொயீன் அலி டெஸ்ட் போட்டிக்கு தற்காலிகமாக விடைகொடுத்திருந்தார். தற்போது பயிற்சிக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி;

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜாக் க்ராவ்லி, ஜோ டென்லி, ஓலி போப், டாம் சிப்லி, கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Mohamed:

This website uses cookies.