விண்டீஸை விரட்டி அடித்தது இங்கிலாந்து அணி !!

விண்டீஸை விரட்டி அடித்தது இங்கிலாந்து அணி

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 87 ரன் வித்தியாசத்தில் விழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ்.

இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. சாம் ஹெய்ன் (145), கோலர்-காட்மோர் (67), முல்லேனே (58) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து லயன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.

பின்னர் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ களம் இறங்கியது. முகமது (52), ஆர். பொவேல் (55) ஆகியோரின் அரைசதத்தால் அந்த அணி 44.4 ஓவரில் 231 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து லயன்ஸ் முதல் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.