அடுத்த உலகக்கோப்பை இந்த அணிக்கு தான்; டூ பிளசிஸ் நம்பிக்கை !!

அடுத்த உலகக்கோப்பை இந்த அணிக்கு தான்; டூ பிளசிஸ் நம்பிக்கை

2019ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை என்றாலே தென் ஆப்பிரிக்க அணிக்கு துரதிருஷ்டம் பீடித்துவிடுகிறது. உலகக் கோப்பை தவிர மற்றநாடுகளுடன் நடக்கும் போட்டித்தொடர்களில் சிறப்பாக விளையாடும் அந்த அணி உலகக்கோப்பையில் இதுவரை அரையிறுதியைத் தாண்டியதில்லை.

PERTH, AUSTRALIA – NOVEMBER 04: Andile Phehlukwayo of South Africa celebrates with his team mates during game one of the One Day International series between Australia and South Africa at Perth Stadium on November 04, 2018 in Perth, Australia. (Photo by James Worsfold/Getty Images)

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது தென் ஆப்பிரிக்கா. 43 ஓவர்களில் 298 ரன்கள் அடிக்க வேண்டியபோது, ஸ்டெயின் வீசிய கடைசி பந்தில் நியூசி வீரர் எலியட் சிக்ஸர் அடித்து வெற்றி பெறவைத்தார். துரதிர்ஷ்டத்துடன் தென் ஆப்பிரிக்க வெளியேறியது

இந்நிலையில், வரும் உலகக்கோப்பைக்கான வாய்ப்பு யாருக்கு இருக்கிறது தங்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இருக்குமா என்று கேப்டன் டூபிளெஸிசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

உலகக் கோப்பையில் வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி வந்தவுடன் எங்களுக்கு ஒருவிதமான அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை உலகக் கோப்பை வெல்லும் அளவுக்குத் தகுந்த பலமான நிலையில் இருக்கிறோம்

ஆனால், இந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் தகுதி முதலில் இந்திய அணிக்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதன்பின் இங்கிலாந்து அணிக்கு இருக்கிறது. இரு அணிகளுக்கும் இந்த முறை வாய்ப்பு இருக்கிறது.

எங்கள் அணியில் இளம்வீரர்களும் அனுபவம் இல்லாதவர்களும் இருப்பதால், வாய்ப்பை நினைத்து உற்சாகமாக இருக்கிறார்கள். நாங்கள் கடந்த காலங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுஇருக்கிறோம், பலமான அணி என்று நாளேடுகளில் வருகிறது. ஆனால், காகிதத்தில் மட்டும் பலமானது என்று இருந்தால் போதாது. கிரிக்கெட் என்பது காகிதத்தில் விளையாடும் விளையாட்டு அல்ல.

எத்திரணிகள் இப்போதுள்ளநிலையில் எங்களுடன் மோதினால், உண்மையாகக் கூறுகிறேன், வலிமையான அணியாக நாங்கள் இல்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பைக்குச் செல்லும்போது, நாங்கள் பேசும் போதும், எங்களுடன் போட்டியிடும் அணியும் எங்களுக்கு எதிராகப் பேசத்தான் செய்வார்கள் என்றார்.

Mohamed:

This website uses cookies.