அவமானப்படுத்திய அயர்லாந்து அணியை அசால்டாக பழீ தீர்த்துள்ளது இங்கிலாந்து
முதல் இன்னிங்ஸில் தன்னை 85 ரன்களில் ஆல் அவுட்டாக்கிய அயர்லாந்து அணியை, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 38 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி இங்கிலாந்து அணி பழீ தீர்த்துள்ளது.
இங்கிலாந்து அயர்லாந்து இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 85 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வது இன்னிங்சில் மீண்டெழுந்து 303 ரன்களை எடுக்க அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் இறங்கி வேறு பவுலர்களுக்கு பந்து வீச வாய்ப்பேயளிக்காமல் வோக்ஸ் 17 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், பிராட் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இருவரது முதல் ஸ்பெல் முடிவடைவதற்குள்ளாகவே ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அயர்லாந்தில் தொடக்க வீரர் ஜே.ஏ.மெக்கொல்லம் மட்டுமே இரட்டை இலக்கம் எட்டி 11 ரன்கள் எடுத்தார், மற்றவர்களின் ஸ்கோர் 2, 5, 0, 4, 0, 4, 8, 0, 2, 0 என்று தொலைபேசி எண் போல் காட்சியளித்தது.
இதன் மூலம் அயர்லாந்து அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 182 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 15.4 ஓவர்களில் 38 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது.