டெஸ்ட் அணியில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க காத்திருக்கும் பட்லர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான பட்லர், டெஸ்ட் அணியில் மீண்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இடம்பிடிக்க உள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அடில் ரசீத்தும், அலெக்ஸ் ஹெல்ஸும் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட போவது இல்லை என்று அறிவித்துவிட்டு லிமிடெட் ஓவர், அதாவது ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இரண்டு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை பயன்படுத்தி கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த பட்லர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க ஆர்வத்துடன் காத்துள்ளார்.
இது குறித்து பேசிய பட்லர், அலெக்ஸ் ஹெல்ஸ் மற்றும் அடில் ரசீத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது, மேலும் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் அதில் யாரும் முடியாது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விரைவில் இடம்பிடித்து, அதில் சிறப்பாக விளையாடவும் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.