இலங்கை வீரர்களுக்கு கை கொடுக்க மாட்டோம்; இங்கிலாந்து வீரர்கள் அதிரடி முடிவு !!

இலங்கை வீரர்களுக்கு கை கொடுக்க மாட்டோம்; இங்கிலாந்து வீரர்கள் அதிரடி முடிவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் ஒருவருக்கொருவர் கைலுக்க மாட்டோம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டனர். ஒன்றிரண்டு வீரர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மார்ச் 19-ல் காலேயில் தொடங்குகிறது. அதற்கு முன் மார்ச் 7-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரையும், மார்ச் 12-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரையும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதற்கான இங்கிலாந்து அணி இலங்கை வருகிறது. இதற்கு ஆயத்தமாகும் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டிடம் கொரோனோ வைரஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

ஜோ ரூட் இதற்கு பதிலளிக்கையில் ‘‘தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அணியின் ஏராளமான வீரர்கள் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பிறகு, அதுகுறித்து நாங்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளோம். கிருமிகள் மற்றும் பாக்டீரியா பரவுவதை தடுக்க எங்களுடைய மருத்துவக்குழு குறிப்பிடத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

நாங்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்க மாட்டோம். கைகளை ரெகுலராக சுத்தம் செய்வோம். பாக்டீரியா எதிர்ப்பு துடைப்பானை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்வோம்.

கொரோனா வைரஸால் இலங்கை தொடர் பாதிக்கப்படும் என்ற ஆலோசனை ஏதும் இல்லை. ஆனால், அவசரமான சூழ்நிலை ஏற்பட்டால் தொடர்ந்து எங்கள் அதிகாரிகளுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.