ஒல்லி ராபின்சனை தொடர்ந்து மற்றும் ஒரு வீரர் சர்ச்சை பதிவு பதிவு! கடுப்ப்பான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

2012 மற்றும் 2013 ஆம் வருடங்களில் ராபின்சன் தனது ட்விட்டர் வலைதளத்தில் இன ரீதியாக சில தகாத பதிவுகளை பதிவிட்டிருந்தார். அப்போது ஒரு பதிவிட்டது சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் கண்டறியப்பட்டு மிகப்பெரிய பேசு பொருளானது நம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு கண்டனங்கள் நிறைய எழுந்தது.

குறிப்பாக இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகக் கோபத்துடன் இருந்தனர். அவன் நிச்சயமாக இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அவரும் தாமாக முன்வந்து தான் பேசிய அனைத்து வார்த்தைகளுக்காக மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பொதுவாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ராபின்சன் சஸ்பெண்டு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு

மன்னிப்பு கேட்ட போதிலும் ராபின்சன் சிலகாலம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் மிக சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே மிக சிறப்பாக செயல்பட்டு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இருப்பினும் முன்னர் செய்த ஒரு தவறான செயல் அவருக்கு மிகப் பெரிய தண்டனையை தற்போது வழங்கியுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ராபின்சன் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது, மேலும் அவர் பழையபடி கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இங்கிலாந்து நிர்வாகம் அதிரடியாக அவருக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

மேலும் ஒரு வீரர் கண்டறியப்பட்டுள்ளார், மௌனம் காத்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு

இந்நிலையில் மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் தனது 16வது வயதில் சில தகாத பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது விசாரணை நடத்த போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த வீரர் யார் என்று தற்பொழுது வரை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சொல்ல மறுத்து வருகிறது.

நிச்சயமாக இன்னும் சில நாட்களில் அந்த வீரர் யார் என்கிற அடையாளம் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனைகள் வழங்குவதில் மூலமாகத்தான் இந்த மாதிரியான செயல் பின்னர் நடைபெறாமல் இருக்கும் என்று பல கிரிக்கெட் ஆலோசகர்களும், வல்லுனர்களும் மற்றும் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.