துபாயில் லங்காஷயரை எதிர்த்து சர்ரே அணி ஆடிய டி10 போட்டியில் முன்னாள் இங்கிலாந்து U-19 பேட்ஸ்மேன் வில் ஜாக்ஸ் 25 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஜாக்ஸ் லங்காஷயர் பந்து வீச்சாளர்களை மைதானத்தில் அனைத்துப் பகுதிகளிலும் விளாசி, கிரிக்கெட் வீடியோ கேம்களில் வருவதை போல ரசிகர்களுக்கு நினைவுபடுத்தினார்.
சர்ரே இன் இன்னிங்ஸில் ஐந்தாவது ஓவர் லாங்க்சயர் வீரர் ஸ்டீபன் பாரி வீசிய போது வில் ஜாக்ஸ் ஆறு சிக்சர்களை அடித்தார். 20 வயதான ஜாக்ஸ் 62 ரன்களில் இருந்து 98 ரன்களுக்கு 6 பந்துகளில் சென்றார்.
ஜாக்ஸ் 22 பந்துகளில் 98 ரன்களை எடுத்தார். இருப்பினும், க்ராஃப்ட்டுக்கு எதிராக 2 டாட் பந்துகளை அவர் எதிர்கொண்டார், அதன் பின் நேர்த்தியான கவர் ட்ரைவ் ஷாட் அடித்து சதம் கண்டார் வில் ஜாக்ஸ்.
ஜாக்சன் 30 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் 9வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் சிக்ஸர் அடிக்க முயன்றபோது கேட்ச் ஆகி வெளியேறினார். ஜாக்சின் இந்திய அதிரடியால் சரேய் 3 விக்கெட் இழப்பிற்கு 10 ஓவர்களில் 176 ரன்களை எடுத்து மிரளவைத்தது.
லங்காஷயர் மூன்று ஓவர்களில் 48 ரன்கள் எடுத்து பதிலடி கொடுக்க முயன்றாலும், வழக்கமான இடைவெளியில் விக்கெட்களை இழந்துகொண்டே வந்தது, ரன் விகிதம் விகிதம் இமாலய இலக்காக இருந்தது. லாங்கஷைர் இறுதியில் 9.3 ஓவர்களில் 81 ரன்களைக் குவித்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, டி10 ஆட்டத்தில் 95 ரன்கள் வித்தியாசத்தில் சர்ரே வென்றது.
டி 20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களை ஒரு கட்டத்தில் ஈர்த்து வந்தது, தற்போது இந்த புதிய கிரிக்கெட் வடிவமைப்பு, பலரை வெகுவாக கவர்ந்து வருகிறது. எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 லீக், 2018 ஆம் ஆண்டு லீக் இரண்டாவது சீசனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி வழங்கப்பட்டது.
உலக சந்தையில் கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் புதிய ஏற்பாடாகவே ஐசிசி நிர்வாகம் இந்த டி10 போட்டிகளை பார்க்கிறது. உலகம் முழுவதும் உள்ள சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் கடந்த ஆண்டு எட்டு அணிகள் கொண்ட லீக்கில் பங்கேற்றனர்.