உலககோப்பையை இந்த அணிதான் வெல்லும்: இந்திய ஜாம்ப்வான் கவாஸ்கர் கணிப்பு! ஆனால் அது இந்திய அணி இல்லை!

உலக கோப்பை போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டனும் டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து அணி இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்று உள்ளது. 1979-ல் வெஸ்ட்இண்டீசிடமும், 1987-ல் ஆஸ்ரேலியாவிடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி சார்பில் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2019 லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.
பாடகர் ஜான் நியூமேன் மற்றும் இசைக்கலைஞர்கள் அடங்கிய குழு ரசிகர்கள் முன்னிலையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

ராணி எலிசபெத் வாழ்த்து
முன்னதாக லண்டன் பக்கிங்காம் அரண்மைனையில் விராட் கோலி உள்பட 10 அணிகளின் கேப்டன்களை சந்தித்த ராணி எலிசபெத் அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் 10 அணிகளின் கேப்டன்கள்.

மேலும் முன்னாள் வீரர் பிளிண்டாஃப், பாடகி ஷிபானி டன்டேகர், பேடி மெக்கின்னஸ் ஆகியோர் உலகக் கோப்பை தொடக்க விழாவை தொகுத்தளித்தனர். ஸ்கை டிவி மூலம் ஒளிப்பரப்பான இந்நிகழ்ச்சியை உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். தொடக்க விழா நடந்த லண்டன் மால் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குவிந்திருந்தனர்.மேலும் டிவி நடிகர் கிறிஸ் ஹியூக்ஸ், கால்பந்து வீரர் ஸ்டீவன் பியனார். உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் 100 நாள்கள் சுற்றுப்பயணம் செய்த பின் லண்டன் வந்தடைந்த உலகக் கோப்பையை 2015 உலகக் கோப்பை கேப்டன் மைக்கேல் கிளார்க், போட்டி தூதர் கிரேம் ஸ்வான் ஆகியோர் பெற்றனர்.
இதுதொடர்பாக போட்டி இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறுகையில்:
கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் புதிய ரசிகர்களை கவர பல்வேறு நடவடிக்கைகளை ஐசிசி எடுத்தது. குழந்தைகள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
எதிர்கால தலைமுறையினர் மத்தியிலும் கிரிக்கெட் ஆட்டத்தை மேலும் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 வாரங்களில் உலகின் தலைசிறந்த 10 அணிகள் ஆடுவதை ரசிக்கலாம் என்றார்.

ஐசிசி அதிகாரபூர்வ பாடல்
உலகக் கோப்பைக்கான ஐசிசி அதிகாரபூர்வ பாடலை லாரின்-ரூடிமென்டல் பாடினர். அதற்கு ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடினர்.
லண்டன் மால் பகுதி முழுவதும் ரசிகர்கள் நிறைந்து காணப்பட்டதால் திருவிழா கோலம் பூண்டிருந்தது.

60 வினாடிகள் கிரிக்கெட்
மேலும் பிரபல முன்னாள் வீரர்கள் பங்கேற்ற 60 வினாடிகள் கிரிக்கெட்டும் நடைபெற்றது. இந்திய தரப்பில் அனில் கும்ப்ளே, பர்ஹன் அக்தர் பங்கேற்றனர். இந்திய அணி சொதப்பியதால் வெறும் 19 புள்ளிகளே பெற்றது.
பிரட் லீ-பேட் கேஷ் அடங்கிய ஆஸி அணி 69 புள்ளிகளையும், அஸார் அலி-மலாலா யூசுப்ஸாய் அடங்கிய பாக். அணி 38 புள்ளிகளையும், விவ் ரிச்சர்ட்ஸ்-யோகன் பிளேக் அடங்கிய மே.இ.தீவுகள் 47 புள்ளிகளையும், ஆப்கானிஸ்தான் 52 புள்ளிகளையும், இலங்கை 43 புள்ளிகளையும், கெவின் பீட்டர்சன் அடங்கிய இங்கிலாந்து அணி 74 புள்ளிகளையும், வங்கதேச அணி 22 புள்ளிகள் மட்டுமே குவித்தன.

Sathish Kumar:

This website uses cookies.