27 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலியாவை வதம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!!

ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி.

27 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்க்கு முன்பு 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்குள் இங்கிலாந்து அணி நுழைந்தது. இங்கிலாந்து அணி உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு செல்வது இது நான்காவது முறையாகும். இதற்க்கு முன்னர் 1979, 1987 மற்றும் 1992 ஆகிய உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் வார்னர் 9 ரன்களிலும், பின்ச் டக் ஆகியும் வெளியேறினர். பின்னர் வந்த ஹேண்ட்ஸ்கோம் 4 ரங்களுக்கும் ஆட்டமிழந்தார். 14/3 என இருக்க அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்மித் இருவரும் அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். அலெக்ஸ் (46), ஸ்டைனிஸ் (0), மேக்ஸ்வெல் (22), கம்மின்ஸ் (6) என நடுவரிசை தரைமட்டம் ஆக ஸ்மித் 83 ரன்கள் எடுத்தார். 49 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஜோடி பைர்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ராய் இருவரும் 124 ரன்கள் சேர்த்தனர். பைர்ஸ்டோவ் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 85 ரன்கள் அடித்திருக்கையில் அம்பையர் தவறான முறையில் அவுட் கொடுக்க, கோபமாக வெளியேறினார். பின்னர் ரூட் (49) மற்றும் மார்கன் (45) இருவரும் இறுதி வரை நிலைத்து ஆடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர்.

32.1 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

அபாரமான பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Prabhu Soundar:

This website uses cookies.