இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர் வருகிற ஜூன் 23 அன்று இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது,இந்த போட்டியில் எப்படியாவது இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு களம் இறங்குவதால் இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கீழ் 16 நபர் கொண்ட இங்கிலாந்து அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்சர் தவிர்த்து ரிஸ் டாப்லி விளையாட்டு சுமை காரணமாக இந்த தொடரில் பங்கு கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகிற ஜூன் 23 மற்றும் 24 இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளில் அடுத்தடுத்து நடைபெற உள்ளது,அதனை தொடர்ந்து ஜூன் 26 இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ஜூன் 29 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் இரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் பங்கு கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான இந்தத் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, இலங்கைக்கு எதிரான ஒவ்வொரு போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெறுவதற்கு அதிகப்படியான முயற்சிகளை எடுப்போம். இங்கிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான வீரர்கள் பலரும் இல்லாதது வருத்தம் அளித்தாலும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டேவிட் வில்லி போன்ற வீரர்கள் இங்கிலாந்து அணிக்காக மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கூறினார்.
மேலும் இந்தத் தொடர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு மிகவும் உபயோகமான ஒன்றாகத் திகழும் என்று தெரிவித்தார். மேலும் எங்களது அணி இந்த போட்டியில் மிகவும் அதிரடியாக செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்த அவர் நிச்சயம் இங்கிலாந்து அணி ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த விருந்தாக அமையும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி
இயான் மோர்கன்(c), மொய்ன் அலி, ஜோனதன் பெஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர் (wk), சாம் கரன், டாம் கரண், லியாம் டாவ்சன், கிரிஸ் ஜோர்டன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அதில் ரஷீத், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிரீஸ் வோ, மார்க் வுட்