டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தேர்வு: முக்கிய வேகப்பந்ததுவீச்சாளரை எடுக்காமல் பெரும் தவறு செய்த ஆஸ்திரேலியா!!

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது . இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்படவில்லை . இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் தவறாக சென்ற முடிய வாய்ப்புள்ளது

அணிகள்:

ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, டிராவிஸ் தலைவர், மத்தேயு வேட், டிம் பெயின் (w / c), ஜேம்ஸ் பாட்டின்சன், பாட் கம்மின்ஸ், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

இங்கிலாந்து : ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட் (கே), ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் (கீ), ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச்

Mitchell Starc struck immediately with the new ball, Australia v England, 2nd Test, Adelaide, December 6, 2017. Mitchell Starc struck immediately with the new ball, Australia v England, 2nd Test, Adelaide, December 6, 2017

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின்போது ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டது.

இதனால் இன்று தொடங்கும் 3-வது ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘நாங்கள் ஸ்விங் ஜாம்பவானான ஜேம்ஸ் ஆண்டர்சனை நான்கு ஓவர்களோடு இழந்து விட்டோம். அது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. தற்போது ஸ்மித் இல்லாத வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்மித் போன்ற தலைசிறந்த வீரருக்கு எதிராக பந்து வீசும்போது, அவரை அவுட்டாக்க பல்வேறு திட்டங்களை கண்டறிய வேண்டும். ஒரு குறிப்பிட்ட அபாரமான ஸ்பெல்லை ஆர்சர் வீசி ஒரு வழியை தேடித்தந்தார். இந்த வாய்ப்பு உருவாக்கிவிட்டோம் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

ஸ்மித் மூன்று இன்னிங்சில் 144, 142, 92 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sathish Kumar:

This website uses cookies.