இங்கிலாந்து கிரிக்கெட் இயக்குனர் ஆஷ்லே கில்ஸ் இங்கிலாந்து வீரர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் தொடர் மறுபடியும் நடத்தப்பட்டால் நிச்சயமாக அதில் பங்கேற்க மாட்டார்கள் என்று உறுதி அளித்துள்ளார்.
பிசிசிஐ உள் வட்டார செய்திப்படி தற்பொழுது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 வரை நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே தற்போது இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் இயக்குனர் ஆஷ்லே தனது தரப்பு விளக்கத்தை கூறியுள்ளார்.
எங்களுக்கு தொடர்கள் சரியாக உள்ளது
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் ஒரு சிலர் ஓய்வு அளிக்கப்பட்டு மற்ற அனைவரும் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு சென்று அங்கே இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக உலக கோப்பை டி20 தொடர் மற்றும் அதை தொடர்ந்து ஆஷஸ் தொடர் நடக்க இருப்பதால் இந்த ஆண்டு முழுக்க இங்கிலாந்து வீரர்களுக்கு கால அட்டவணை சரியாக உள்ளது என்று கூறியுள்ளார். இடையே எங்கள் வீரர்களுக்கு நாங்கள் ஓய்வு அளித்தாலும், அந்த ஓய்வு அவர்களுடைய உடல் நலத்துக்காக மட்டும்தான். எனவே அந்த இடைவேளையில் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் நிச்சயமாக விளையாட மாட்டார்கள் என்று உறுதியாக கூறியுள்ளார்.
தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கு நிச்சயமாக ஓய்வு தேவை. எனவே எங்கள் வீரர்களின் நலன் கருதி நாங்கள் கால அட்டவணைகளை தற்பொழுதே நாங்கள் கிட்டத்தட்ட உறுதிப் படுத்தி விட்டோம். எனவே அதன் அடிப்படையில் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று இறுதியாக ஆஷ்லே கூறி முடித்தார்.