இங்கிலாந்து அணி அபார ஆட்டம்: தென்னாப்பிரிக்கவிற்கு இமாலய இலக்கு நிர்ணயிப்பு!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஓவரினை இம்ரான் தாஹிர் வீசியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையே லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜானி பேரிஸ்டோவ், ஜேசன் ராய் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே தென்னாப்ரிக்க அணி ஷாக் கொடுத்தது. அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் முதல் ஓவரை வீசினார். வழக்கமாக எப்பொழுதுமே வேகப்பந்து வீச்சாளர்கள்தான் முதல் ஓவரை வீசுவார்கள். ஆனால், உலகக் கோப்பையின் முதல் ஓவரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் வீசியுள்ளார்.

கேப்டன் டு பிளிசிஸ்-ன் இந்த ஐடியாவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே அதிரடி ஆட்டக்காரர் பேரிஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார் தாஹிர். பேரிஸ்டோவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், கூகுள் அதனை சிறப்பித்துள்ளது. கூகுள் என்ற ஆங்கில எழுத்தில் பேட் மற்றும் பந்து போன்ற விளையாட்டு பொருட்களை டுடுல் ஆக வைத்துள்ளது.

அதன்பிறகு, ஜேஸன் ராய் மற்றும் ஜோ ரூட் பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.

இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், ஜேஸன் ராய் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ஜோ ரூட்டும் அடுத்த ஓவரிலேயே 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் இங்கிலாந்து அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது.

இதையடுத்து, கேப்டன் மார்கன் மற்றும் ஸ்டோக்ஸ் மீண்டும் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இந்த பாட்னர்ஷிப்பிலும் இருவரும் அரைசதம் அடித்தனர். எனினும் மார்கனும் அரைசதம் அடித்த கையோடு 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடியும் 4-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய பட்லர் 18, மொயீன் அலி 3, வோக்ஸ் 13 என ஏமாற்றம் அளித்தனர்.

LONDON, ENGLAND – MAY 30: Ben Stokes of England batting during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England v South Africa at The Oval on May 30, 2019 in London, England. (Photo by Steve Bardens/Getty Images)

ஸ்டோக்ஸ் மட்டும் தனிநபராக கடைசி வரை போராடி வந்தார். இதனால், இங்கிலாந்து அணி 300 ரன்களைக் கடந்தது. இந்த நிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் 49-வது ஓவரின் கடைசி பந்தில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும், ஃபெலுக்வாயோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Sathish Kumar:

This website uses cookies.