அடுத்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிப்பு! முக்கிய வீரர்கள் வெளியே!
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு தற்போது இங்கிலாந்து நாட்டில் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. முதலில் வெற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது
இவை அனைத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் டி20 போட்டிகள் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டிகளும் நடைபெறும். இதற்காக தற்போது ஒருநாள் மற்றும் டி20 அணிகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
இதில் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளுமே ஆஸ்தான கேப்டன் இயான் மார்கன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது இந்த இரண்டு அணிகளிலும் மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், டாம் குர்ரான், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், அடில் ரஷீத், மார்க் வூட் போன்ற பல வீரர்கள் இருக்கிறார்கள்
இதில் ஜோ ரூட் இடம்பெறவில்லை மேலும் பல டெஸ்ட் வீரர்களுக்கு இந்த அணியில் கண்டிப்பாக இடம் இல்லை என்று தெரிகிறது இந்த இரண்டு தொடர்களும் நடைபெற்று முடிந்தால்தான் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணைகளில் உள்ள ஐபிஎல் வீரர்கள் துபாய்க்குச் சென்று ஐபிஎல் தொடர்களில் விளையாடுவார்கள். என்பது குறிப்பிடத்தக்கது இதனால்தான் ஐபிஎல் நிர்வாகம் தற்போது வரை முழு அட்டவணை எதையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் டி 20 ஐ அணி:
ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், டாம் குர்ரான், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், அடில் ரஷீத், மார்க் வூட்
மாற்று வீரர்கள்:
லியாம் லிவிங்ஸ்டன், சாகிப் மஹ்மூத்.
இங்கிலாந்தின் ஒருநாள் அணி:
ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், டாம் குர்ரான், அடில் ரஷீத், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்
மாற்று வீரர்கள்:
ஜோ டென்லி, சாகிப் மஹ்மூத்.