ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மீண்டும் அணியில் இடம்… முக்கிய வீரர் அதிரடி நீக்கம்; நான்காவது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !!

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மீண்டும் அணியில் இடம்… முக்கிய வீரர் அதிரடி நீக்கம்; நான்காவது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி 19ம் தேதி துவங்க உள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை துவங்கியுள்ள இங்கிலாந்து அணி, அடுத்த போட்டிக்கான ஆடும் லெவனில் ராபின்சனுக்கு இடம் கொடுக்காமல், சீனியர் வீரரான ஆண்டர்சனுக்கு இடம் கொடுத்துள்ளது. ஆண்டர்சன் மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.

இது தவிர இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் பேட்ஸ்மேன்களாக ஜாக் கிராவ்லே, பென் டக்கட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக வழக்கம் போல் ஜானி பாரிஸ்டோவும், ஆல் ரவுண்டர்களாக மொய்ன் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸும் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்;

ஜாக் கிராவ்லே, பென் டக்கெட், மொய்ன் அலி, ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பாரிஸ்டோ (விக்கெட் கீப்பர்), கிரிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Mohamed:

This website uses cookies.