இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நேற்று துவங்கியது இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் தடுமாறிய இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது
முதலில் தடுமாறிய இங்கிலாந்து அணி 172 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது
இங்கிலாந்து அணி விவரம்:-
1. டாம் சிப்லி, 2. ரோரி பேர்ன்ஸ், 3. கிராவ்லி, 4. ஜோ ரூட், 5. ஒல்லி போப், 6. ஜோஸ் பட்லர், 7. கிறிஸ் வோக்ஸ், 8. டாம் பெஸ், 9. ஜாஃப்ரா ஆர்சர், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.
பாகிஸ்தான் அணி விவரம்:-
1. ஷான் மசூத், 2. அபித் அலி, 3. அசார் அலி, 4. பாபர் அசாம், 5. ஆசாத் ஷபிக், 6. பவத் அலாம், 7. முகமது ரிஸ்வான், 8. யாசிர் ஷா, 9. ஷாஹீன் அப்ரிடி, 10. முகமது அப்பாஸ், 11. நசீம் ஷா.
ஆனால் டாம் சிப்லி 22 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 127 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார்.
மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த விக்கெட்டை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நாங்கள் முதல் இடம் பிடிப்போம் என்று முதலிடத்தில் உள்ள இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அவர் கூறுகையில் தற்போது உள்ள இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த இந்த வீரர்களை வைத்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும் பந்துவீச்சாளர்கள் சரியாக இருக்கிறார்கள் உலகின் எந்த ஒரு இடத்திலும் இவர்களால் சரியாக பந்து வீச முடியும் மீண்டும் இங்கிலாந்து முதல் இடத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜோ ரூட்