இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த இலக்கை நோக்கி தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கியுள்ள இலங்கை, 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 17 ஓவர்களில் 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்தது. இருநாள் ஆட்டமே மீதமுள்ள நிலையில், இலங்கை 6 விக்கெட்டுகளைக் கொண்டு 274 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 92 ஓவர்கள் 5 பந்துகளில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. அடுத்து களம் கண்ட இலங்கை 65 ஓவர்கள் 5 பந்துகளில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் முதல் இன்னிங்ஸில் 96 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, 2-ஆவது இன்னிங்ஸில் 69 ஓவர்கள் 5 பந்துகளில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தற்போது 327 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடி வருகிறது இலங்கை. அந்த அணியின் குசல் மெண்டிஸ் 15, லக்ஷன் சன்டகன் 1 ரன்னுடன் ஆடி வருகின்றனர்.