2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் திட்டமிடப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 5 முதல் 9ஆம் தேதி வரை மற்றும் பிப்ரவரி 11 முதல் 17ஆம் தேதி வரை என முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற போகிறது.
அதை அடுத்து இரண்டு போட்டியிலும் அகமதாபாத் மைதானத்தில் நடந்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனைத் தாண்டி முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடர் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. மார்ச் 12 முதல் மார்ச் 20ம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மொத்தம் ஐந்து டி20 போட்டிகள் அகமதாபாத் மைதானத்தில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் புனே மைதானத்தில் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.
சுற்றுப்பயணத்தின் முழுமையான அட்டவணை கீழ் உள்ளது:
இங்கிலாந்து இந்திய சுற்றுப்பயணம், 2020/21 – டெஸ்ட் தொடர் | |||
S.No. | தேதி | போட்டி | இடம் |
1 | 5 வது – 9 வது பிப்ரவரி | 1 வது டெஸ்ட் | சென்னை |
2 | 13 வது – 17 வது பிப்ரவரி | 2 வது டெஸ்ட் | சென்னை |
3 | 24 வது – 28 வது பிப்ரவரி | 3 வது டெஸ்ட் (டி / என்) | அகமதாபாத் |
4 | 4 வது – 8 வது மார்ச் | 4 வது டெஸ்ட் | அகமதாபாத் |
இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம், 2020/21 – டி 20 ஐ தொடர் | |||
S.No. | தேதி | போட்டி | இடம் |
1 | 12 வது மார்ச் | 1 வது டி20 ஐ | அகமதாபாத் |
2 | 14 வது மார்ச் | 2 வது டி20 ஐ | அகமதாபாத் |
3 | 16 வது மார்ச் | 3 வது டி20 ஐ | அகமதாபாத் |
4 | 18 வது மார்ச் | 4 வது டி20 ஐ | அகமதாபாத் |
5 | 20 வது மார்ச் | 5 வது டி20 ஐ | அகமதாபாத் |
இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம், 2020/21 – ஒருநாள் தொடர் | |||
S.No. | தேதி | போட்டி | இடம் |
1 | 23 வது மார்ச் | 1 வது ஒருநாள் | புனே |
2 | 26 வது மார்ச் | 2 வது ஒருநாள் | புனே |
3 | 28 வது மார்ச் | 3 வது ஒருநாள் | புனே |
இதுகுறித்து பேட்டியளித்த ஜெய் ஷா ” இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும். பின்பு அகமதாபாத்தில் இருக்கும் மொடேரா மைதானத்தில் பிப்ரவரி 24 இல் பகலிரவு போட்டியாக நடைபெறும். இதில் 5 டி20 போட்டிகளும் மொடேரா மைதானத்தில் நடைபெறும்” என்றார் ஜெய் ஷா.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. மேலும் இரு அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகளும் நடைபெறும். மிக முக்கியமாக 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறும் என்று ஏற்கெனவே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.