டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி.. வெல்லப்போவது யார்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் தொடராக ஆஷஸ் தொடர் அமைந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

மைதானத்தின் வானிலை:

பகல் நேரங்களில் வானிலை நன்றாக இருக்கும். 5 நாட்களும் சராசரியாக 20 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை தொடர்ந்து வெப்பநிலை நீடிக்கும். இரவு நேரங்களில் மழை தூரல் வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அது அடுத்த நாள் பிட்ச் நிலையை பெரிதாக மாற்றாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி வீரர்களின் விவரம்

இங்கிலாந்து அணி வீரர்கள்

ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்

டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், ஸ்டீவ் ஸ்மித் , உஸ்மான் குவாஜா,  டிராவிஸ் ஹெட், டிம் பெயின் (கேப்டன் & கீப்பர்), பாட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பாட்டின்சன், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், பீட்டர் சிடில்.

நேருக்கு நேர்

இரு அணிகளும் இதுவரை 330 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில்,

ஆஸ்திரேலியா – 134 போட்டிகளில் வெற்றி

இங்கிலாந்து – 106 போட்டிகளில் வெற்றி

டிரா – 90 போட்டிகள்

வெற்றி கணிப்பு

 

2001ஆம் ஆண்டிற்க்கு பிறகு இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி ஒருமுறை கூட வெல்லவில்லை. இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 14 போட்டிகளில் 9 தோல்வி, 1 போட்டி டிரா மற்றும் 4 போட்டிகள் முடிவில்லாமல் போனது.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அதிகபட்சமாக மொயின் அலி 69.00 சராசரியாக கொண்டுள்ளார்.

இம்முறையும் இங்கிலாந்து அணியே வெல்லும் என கணிக்கப்படுகிறது.

.

Prabhu Soundar:

This website uses cookies.