மீண்டும் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து ஹைலைட்ஸ் வீடியோ!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி கோட்டைவிட்டு 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நேற்று 2-வது போட்டி நடைபெற்றது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 3 பந்துகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் ஆரோன் பின்ச் 33 பந்துகளில் 40 ரன்கள் மார்க்கஸ் ஸ்டொய்னிஷ் 26 பந்துகளில் 32ரன்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி துவக்கம் முதலே போட்டியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்தது. அணியின் துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினர். ஜானி பேர்ஸ்டோ துரதிஸ்டவசமாக ஹிட் விகெட் ஆகி வெளியேறினார்.
ஆனால் மற்றொரு முனையில் இருந்த ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும். அடுத்து வந்த டேவிட் 32 பந்துகளில் 42 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ஆட்டநாயகனாக 77 ரன்கள் குவித்த ஜோஸ் பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று கைப்பற்றியது.