பென் ஸ்டோக்ஸ் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து குற்றவாளி இல்லை என தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு பிரிஸ்டல் நகரின் தெருவில் நடைபெற்ற தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டார். இவரிடம் ஆதி வாங்கிய ரியல் அலி என்பவர் கடுமையான தாக்குதலுக்கு உண்டாகி சம்பவ இடத்தில மயக்கம் அடைந்ததால் சம்பவம் தீவிரமடைந்தது.
இவர் மீது வழக்கு பிரிஸ்டல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஸ்டோக்ஸ் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்று இந்திய அணிக்கு எதிராக சிறப்பாகவும் செயல்பட்டார். ஆனால், திங்களன்று இவர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்ததால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் ஆடமுடியவில்லை.
முன்றாவது போட்டியில் விசாரணை விரைவில் முடிந்தால் மட்டுமே ஆடுவார் என இருந்தது. இந்நிலையில் விசாரணையில் ஸ்டோக்ஸ் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இரண்டே நாளில் விசாரணை முடிந்தாதல், மூன்றாவது போட்டிக்கான அணி அறிவிக்கப்படும்பொழுது இவரின் பெயர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இவர் இல்லாத குறையை கிறிஸ் வோக்ஸ் நிவர்த்தி செய்துவிட்டார். அவர் சதம் அடித்து அசதி அணியின் வெற்றிக்கு வழி செய்தது மட்டுமல்லாமல், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். தற்போது ஸ்டோக்ஸ் மீண்டும் வந்துள்ளதால் யாருக்கு இடம் அளிக்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் காணவேண்டும்.
திரு அலி நீதிமன்றத்தில் விட்டு வெளிய வந்த பிறகு பிபிசி ஸ்போர்ட் இடம் அவர் தீர்ப்பு குறித்து பேசிவிட்டு, அவர் மேலும் கருத்துக்கள் கூற விரும்பவில்லை என்று அவர் கூறினார். பென் ஸ்டோக்ஸ், அவர் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஸ்டோக்ஸ் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து ஒரு சாம்பியன் ஆல்ரவுண்டர் வருகிறது. இங்கிலாந்து அணி இவர் வரவிற்கு பின் 5-0 என வெல்லும் முனைப்பிலும் உள்ளது. ஸ்டோக்ஸ் முதல் டெஸ்டில் பந்தை மிகவும் நன்றாக வீசினார். ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இறுதியில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.