கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சாத்தியமான மாற்றங்களைப் பார்ப்பதற்கு முன்பே நாம் பார்க்கவேண்டியது நிறைய இருக்கிறது. 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முந்தைய சுற்றுப்பயணத்தை போலவே, உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக திகழும் தற்போதும் பாதாளத்தை தொடும் நிலைக்குத் தள்ளப்பட்டு, ஐந்து ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் 0-2 என்றகணக்கில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. உண்மையில், இது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியின் பரிதாபமான செயல்திறன் தான்.
விராட் கோஹ்லி தலைமையிலான அணி மைதானங்களில் நிலை மற்றும் ஸ்விங்கிங் ஆகியவற்றை சமாளிக்க முடியவில்லை, மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் குர்ரான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மிக அற்புதமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகின்றன.
அணி நிர்வாகம் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சிறப்பான நிலையில் இருக்கும் வீரர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். எனவே, இது தொடர்பாக, இறுதி டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சில மாற்றங்களைக் காணலாம்.
கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அணியில் நான்கு சாத்தியமான மாற்றங்கள் இருக்குமானால் அது இதுவாக தான் இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது.
1. அஜிங்கியா ரஹானுக்கு பதிலாக ரோஹித் ஷர்மா:
ரோஹித் ஷர்மா
அஜிங்க்யா ரஹானே தொடரில் இதுவரை ஒரு சிறப்பான ஆட்டத்தையும் பார்க்கவில்லை. அவர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்திருக்க முடியாத அளவிற்கு ஒரு மோசமான பாணியில் ஆடிவருகிறார்.
முன்னணி வீரர்கள், ரஹானே இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறிவந்தனர். இருப்பினும், அவரது செயல்திறன் அண்மைக்காலமாக சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. மேலும் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவருக்கு இடமளிப்பது சந்தேகம் தான்.
அப்படி இருந்தால், ரோஹித் ஷர்மா வாய்ப்பு கிடைக்கலாம். அவர் ஒரு சாம்பியன் லிமிடெட் ஓவர்ஸ் பேட்ஸ்மேன் ஆவார். இருப்பினும், அவரது டெஸ்ட் சாதனை அவ்வளவு பெரியதல்ல என்பதனால் முதல் மூன்று போட்டிகளில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை. ஆனால், அணியின் தற்போதைய நிலைக்கு, ரோஹித் மீண்டும் அணியில் அழைக்கப்படலாம்.