லார்ட்ஸ் மைதானத்தில் பெற்ற படு தோல்விக்கு பிறகு, விராத் கோஹ்லி உருக்கமான செய்தியை வெளியிட்டு ரசிகர்களை கடினமான நேரங்களில் உடன் இருக்குமாறு கேட்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதில் கேப்டன் கோஹ்லி மட்டுமே ஓரளவுக்கு தாக்கு பிடித்தார். பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் இஷாந்த் சிறப்பாக செயல்பட்டனர்.
இரண்டாவது போட்டயிலாவது இந்தியா விட்டதை பிடித்து வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்சில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆண்டர்சன் வசம் சரணடைந்தது. சிறப்பாக ஆடிய வோக்ஸ் சதம் விளாசினார். இந்திய அணியை விட 397 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
290 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆட துவங்கிய இந்தியா, ஆரம்பத்தில் இருந்தே சொதப்பல் தான். இறுதியில் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, இன்னிங்ஸ் மட்டும் 159 ரன்களில் தோல்வியை தழுவியது. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
ரசிகர்கள் மட்டுமல்ல பிசிசிஐ நிர்வாகமும் கடும் கோபத்தில் உள்ளது. சாஸ்திரி மற்றும் கோஹ்லி இருவரின் மீதும் சரமாரியான கேள்விகளை முன்வைத்தது. நிச்சயம் இதற்க்கான விசாரணையும் உண்டு என்றும் தெரிவித்தது.
இதற்கிடையில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தனது பேட்ஸ்மேன்களிலிருந்து அதிகம் எதிர்பார்ர்பு கொண்டிருப்பர். பேட்ஸ்மேன்கள் நல்ல தோற்றத்துடன் வர வேண்டும் என்பது அவர் எண்ணம், ஆனால் பேட்ஸ்மேன்கள் அணியை விட்டுவிடுகிறார்கள்.
துவக்க வீரர்கள் பக்கம் ஒரு நல்ல துவக்கம் இன்னும் அமையவில்லை தொடர்ந்து சிறப்பான துவக்கம் கொடுக்க தவறிவிட்டனர். மேலும், கோலிக்கு இடையே உள்ள நடுத்தர வீரர்கள் அவர்களது இன்னிங்ஸில் எந்தவிதமான உத்வேகமும் பெறவில்லை.
எனவே, இந்திய தேர்வாளர்கள் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சில மாற்றங்களை கொண்டு வரக்கூடும். இதற்கிடையில், மூன்றாவது டெஸ்டில் ஜஸ்பிரித் பம்ரா தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவிற்கு ஒரு நல்ல அறிகுறி அல்ல.
மூன்றாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 18, நாட்ஹம்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் நகரில் நடைபெறும்.
“சில நேரங்களில் நாம் வென்றெடுக்கிறோம், மற்ற நேரங்களில் நாம் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் ஒருபோதும் எங்களை விட்டு விலக வேண்டாம், நாங்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். தோல்வி தான் நிறைய கற்று தரும்” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.