இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இந்து இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்க இருக்கிறது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் வேரால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணியும், வென்றே ஆக வேண்டும் என்ற இலக்குடன் இந்திய அணியும் மோத இருக்கின்றன.
இதனால், இரு அணிகள் இடையேயான போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குலதீப் இரண்டாவது போட்டியிலும் தனது சூழல் வித்தையை காட்ட கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
முதல் போட்டியில் புவனேஷ் குமார் 4 ஓவரில் 45 ரன்கள் விட்டுக் கொடுத்தது கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும். பும்ரா வேறு அணியில் இல்லை. ஆக, ஸ்பின் எனும் ஆயுதத்தை மட்டும் நம்பி இருக்காமல், வேகப்பந்து வீச்சின் வீச்சை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.
பேட்டிங்கில் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுலிடமிருந்து மற்றுமொரு சிறந்த பேட்டிங்கை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கேப்டன் விராட் கோலி, எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா என இந்தியாவின் பேட்டிங் வலுவாக உள்ளது. எனவே இந்த ஆட்டத் தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. அதே நேரத்தில் முதல் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பழிவாங்கும் விதத்தில் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது
அயர்லாந்து தொடரிலும், முதல் டி20 போட்டியிலும் சரிவர செயல்படாத கேப்டன் விராத் கோலி தனது ஃபார்மை கொண்டுவர இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இந்தியா vs இங்கிலாந்து இதுவரை.. .
இந்தியா இங்கிலாந்து இரு அணிகளும் டி20 போட்டியில் நேருக்கு நேர் 12 முறை மோதியுள்ளது. இரு அணிகளும் தலா 6 முறை வென்றுள்ளன. இந்த போட்டியை வெல்லும் அணி முன்னிலை வகிக்கும்.
இன்று போட்டி நடைபெறும் கார்டிஃப் மைதானத்தில், டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி இதுவரை தோற்றதே கிடையாது. வின்னிங் பெர்சன்ட் 100
கணிக்கப்பட்ட இந்திய அணி
கே எல் ராகுல், விராத் கோஹ்லி (சி), சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி (விக்கெட்), ஹார்டிக் பாண்டியா, சித்தார்த் கவுல், யூசுந்தர சாஹல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ்
கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி
ஜேசன் ராய், ஜோஸ் பட்லெர் (WK), ஈயோன் மோர்கன் (சி), அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜானி பைர்ஸ்டோவ், மோயீன் அலி, டேவிட் வில்லி, லியாம் பிளன்கெட், கிறிஸ் ஜோர்டான், அதில் ரஷித்
நேருக்கு நேர்
இங்கிலாந்து- 6, இந்தியா- 6, டை / NR- 0
ஒளிபரப்பு விவரங்கள் – சோனி ஆறு, சோனி ஆறு HD
நேரடி ஸ்ட்ரீமிங் – சோனி LIV
போட்டி நேரம் : 22:00 IST, 16:30 GMT