ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி தெப்போது பல தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது. இதனால் ரசிகர்கள் ராகுல் டிராவிட் தான் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வர வேண்டும் என பிசிசிஐ நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை மோசமாக செயல்பட்டு வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்களில் தோற்றிருந்தாலும், விராத் கோஹ்லி தனி ஒருவராக செயல்படவில்லை என்றால் இன்னும் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கும். பந்து வீச்சில் இஷாந்த் மற்றும் அஸ்வின் கேப்டன் கோஹ்லிக்கு சிறிது சப்போர்ட் ஆக இருந்தார்கள்.
இரண்டாவது போட்டி இன்னும் மோசம். முதல் இன்னிங்ஸில் வெறும் 107 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இம்முறை விராத் கோஹ்லியும் கை கொடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸிலும் 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முடிவில், இன்னிங்ஸ் மற்றும் 159 வித்தியாசத்தில் படு தோல்வியை சந்திக்க நேரிட்டது டெஸ்ட் போட்டிகளின் நம்பர் 1 அணிக்கு.
இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் நல்ல பயிற்சியாளர்கள் தான் தேவை. ரவி சாஸ்திரி தன் வேலையை சரிவர செய்வதில்லை. அவர் இன்னும் அணியில் நீடிப்பது எவருக்கும் பயனில்லை என்றவாறு கொந்தளித்தது மட்டுமல்லாமல், ராகுல் டிராவிட் தான் இதற்க்கு சரியாக இருப்பார் என்றும் கூற துவங்கினர்.
தற்போது இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளரான இருக்கும் டிராவிட். அங்கு தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார். மேலும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த அடுத்த கணம் முதலே அண்டர் 19 அணிக்கும் பயிற்சியாளராக இன்று வரை தொடர்கிறார்.
இவர் இந்தியா அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ராசிகாரர்கள் பிசிசிஐ நிர்வாகத்திடம் கோரிக்கையின் வேண்டுகோளும் வைத்துள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..