இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இந்தியா தொடருக்கு தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் தொடருக்குள் தயாராகி விடுவேன்- ஸ்டூவர்ட் பிராட் நம்பிக்கை
இந்தியா – இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.
பின்னர் முக்கியத்தும் வாய்ந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்த பேட்ஸ்மேனுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது பிராட்டிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘தலைசிறந்த ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பல்வேறு ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைநார் பிரச்சினைக்கு சில ஊசிகள் போட்டுள்ளேன். எனக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. அதன்பிறகு ஓட திட்டமிட்டுள்ளேன். 22-வந்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.
ஒருவேளை கவுன்ட்டி போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டால் இந்திய தொடரில் பிராட் விளையாடுவது சிக்கலை ஏற்படுத்தும்.
அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளில் டி 20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. பலம் குறைந்த அயர்லாந்து அணியை 2-0 என டி 20 தொடரில் வீழ்த்தியது.
தற்போது இங்கிலாந்துடன் 3 டி 20 ஆட்டங்கள், 3 ஒரு நாள் சர்வதேச ஆட்டங்கள், 5 டெஸ்ட் ஆட்டங்கள் நடக்கின்றன.
- 3, 6, 8-ஆம் தேதிகளில் டி 20 ஆட்டங்களும்,
- 12, 14, 17-ஆம் தேதிகளில் மூன்று 50 ஒரு நாள் போட்டிகளும்,
- ஆக. 1 முதல் 5-ம் தேதி முதல் டெஸ்டும்,
- 9 முதல் 13-ஆம் தேதி வரை இரண்டாம் டெஸ்டும்,
- 18 முதல் 22-ஆம் தேதி வரை மூன்றாவது டெஸ்டும்,
- ஆக. 30 முதல் செப். 3-ஆம் தேதி வரை நான்காவது டெஸ்டும்,
- செப். 7 முதல் 11-ஆம் தேதி வரை ஐந்தாவது டெஸ்டும் நடைபெறுகிறது.
டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி கடந்த 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. வங்கதேசத்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதன்பின்னர் தற்போது 50 ஓவர் ஒரு நாள் போட்டிகளில் பலமான அணியாக உருவெடுத்துள்ளது.
ஆஸி. அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒரு நாள் தொடரில் 4-1 என வீழ்த்தியும், அண்மையில் இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டித் தொடரில் 5-0 என ஓயிட்வாஷ் செய்து அபார ஆட்டத்திறனுடன் உள்ளது இங்கிலாந்து அணி.குக், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜான் பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர்.