பாரபட்சம் பார்க்காமல் பந்தாடிய பட்லர்… கடைசி நேரத்தில் பெரிய சேதாரம் இல்லாமல் தப்பித்த நியூசிலாந்து; 179 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி !!

பாரபட்சம் பார்க்காமல் பந்தாடிய பட்லர்… கடைசி நேரத்தில் பெரிய சேதாரம் இல்லாமல் தப்பித்த நியூசிலாந்து; 179 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய மொய்ன் அலி 5 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 20 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

பாரபட்சம் பார்க்காமல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த ஜாஸ் பட்லர் 18வது ஓவரின் 4வது பந்தில் 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டானார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து அணி 179 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக பெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாட்னர் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.