பாகிஸ்தானின் பந்துவீச்சை சிதறடித்த இங்கிலாந்து வீரர்கள்… மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் !!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி.20 உலகக்கோபை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மற்றொரு பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டியின் ஓவர் தலா 19ஆக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மசூத் 39 ரன்களும், முகமது வாசிம் 26 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து அசால்டாக ரன் குவித்தது. பென் ஸ்டோக்ஸ் 18 பந்துகளில் 36 ரன்களும், ஹாரி ப்ரூக் 24 பந்துகளில் 45* ரன்களும், சாம் கர்ரான் 14 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 14.4 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய இங்கிலாந்து அணி இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

பயிற்சி போட்டி என்பதால் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் இந்த போட்டியில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.