மூன்று வீரர்கள் அதிரடி நீக்கம்; முதலில் பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்கும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மார்க் வுட், சாம் கர்ரான் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஓலி போப் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதே போல் விண்டீஸ் அணியும் இன்றைய போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. அஸ்ஸாரி ஜோசப் நீக்கப்பட்டு கார்ன்வால் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி;
ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
விண்டீஸ் அணி;
கிரைக் பிராத்வெயிட், ஜான் கேம்ப்பெல், ஷேய் ஹோப், ப்ரூக்ஸ், பிளாக்வுட், ரோஸ்டான் சேஸ், டௌரிச்(விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), கார்ன்வால், கீமார் ரோச், கேப்ரியல்.