பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருந்த இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு! பாகிஸ்தான் ரசிகர்கள் கவலை!
கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட இருந்த இங்கிலாந்து அணியின் தொடர் கிட்டத்தட்ட ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து அணி 15 வருடங்கள் கழித்து ஜனவரி மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருந்தது. இந்த போட்டிகள் தற்போது ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன
அப்படியே ஜனவரி மாத இறுதியில் நடத்தினால் கூட இங்கிலாந்து அணி மூன்றாம் தர அணியை தான் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியும். மேலும் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணி வீரர்கள் இலங்கை மற்றும் இந்தியாவில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் இந்த தொடர் பலவந்தமாக நடத்தப்பட்டால் மூன்றாம் தர அணியை தான் இங்கிலாந்து பாகிஸ்தானிற்கு அனுப்ப நேரிடும்
இதன் காரணமாக அடுத்த வருடம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒருமனதாக அறிவித்து இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த தொடர் நடத்துவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கிட்டத்தட்ட 8 லட்சம் பவுண்டுகள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
மொத்தம் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் தான் விளையாடப்படும். இதற்காக இத்தனை கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
இதன் காரணமாக கண்டிப்பாக இந்த தொடர் கிட்டத்தட்ட ரத்து ரத்து செய்யப்படும் தருவாயில் இருக்கிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.