2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரியாக இருக்கப்போவது இந்தியா தான் – இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

MUMBAI, INDIA - MARCH 11: England captain Eoin Morgan and Sam Billings share a joke during a nets session at Wankhede Stadium on March 11, 2016 in Mumbai, India. (Photo by Gareth Copley/Getty Images,)

2019 ம் ஆண்டு துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் நடக்க இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய எதிரியாவும் டவாலாகவும் இருக்கப்போவது இந்தியா தான் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்னும் முழுவ ஒரு வருடம் கூட இல்லை கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளுக்கு, அதற்குள் அவரவர்கள் கணக்கு போட ஆரம்பித்துவிட்டனர். 2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் நடைபெற இருக்கின்றன.

 

2019ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி துவங்கி ஜூலை மாதம் 14 தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகளுக்கான அட்டவணைகளும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்தது.

இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல் முறையாக இங்கிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் விதியத்தில் வென்றது.

Virat Kohli and Yuzvendra Chahal uncork the champagne after the series victory

1-1 என்ற சமநிலையில் இருந்தபொழுது, மூன்றாவது மற்றும் இறுதி போட்டி பிரிஸ்டோலில் நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மாவின் அபார சதத்தினால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

இதேபோல் ஜூலை தேதி துவங்க இருக்கும் ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்றினால் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் துவங்க இருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு சாதகமானதாக இருக்கும்.

India and Pakistan players shake hands after their encounter in ICC Champions Trophy 2017 |Photo Credit: AP, File Image

2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது.

இதுகுறித்து என்கில்டன்ஹு கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ் கூறுகையில், “இங்கு பல அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்தி தோற்கடிப்பது தான் கடினமான சவாலாக இருக்கும்.

மைதானத்துக்கு ஏற்றவாறு எளிதில் தங்களை ஆட்படுத்திக்கொண்டு, எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் இங்கிலாந்து அணிக்கு மைதானத்தில் மிக பெரிய எதிரியாக நான் கருதுவது இந்தியா தான்” என கூறினார்.

Vignesh G:

This website uses cookies.