தோனி சாதனை காலி… உலகின் தலைசிறந்த கேப்டன் என்பதை நிரூபித்த இயன் மோர்கன் !!

சர்வதேச டி20 தொடரில் அதிகமான வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் செய்துள்ளார்.

2021 உலக கோப்பை தொடர் துபாய் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது கிட்டத்தட்ட அரை இறுதிப்போட்டி நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு அணியும் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் கிரிக்கெட் வட்டாரத்தில் உலக கோப்பை தொடருக்கான பேச்சுகள் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது அணியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் ஆகிய இருவரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சர்வதேச டி20 தொடரில் அதிகமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற வரிசையில் மகேந்திர சிங் தோனி மற்றும் ஆஸ்கர் ஆப்கான் 42 முறை தனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து முன்னிலையில் இருந்தனர். அதில் குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆஸ்கர் ஆப்கான் 52 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்று அதிவேக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற வரிசையில் முன்னிலை வகித்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் தனது அணிக்காக கேப்டன் பதவி ஏற்று சர்வதேச டி20 தொடரில் 43 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இருவரின் சாதனையையும் முறியடித்து விட்டார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கிற்குப்பின் இங்கிலாந்து அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் புதுவிதமான உத்திகளின் மூலம் இங்கிலாந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக 2019 இல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது, மேலும் சமீபமாக நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கிட்டத்தட்ட வெற்றியின் பக்கம் வழிநடத்தி கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.