இந்திய அணியுடன் நடைபெற உள்ள ஒருநாள் தொடரை வெல்வதே எங்களது எண்ணமாக உள்ளது. தரவரிசையில் முதலிடம் பிடிப்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து ஏணிகள் மோதும் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாளை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் குலதீப் இருவரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. அதில் அபாரமாக ஆடிய ரூட் சதம் விளாசி அணியை 322 ரன்களுக்கு எடுத்து சென்றார்.
அதை தொடர்ந்து, இலக்கை துரத்திய இந்திய அணி துவக்கம்முதலே தடுமாறியது. இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் 236 ரன்களுக்கு இழந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் நிலையில் உள்ளது. 3வது மற்றும் இறுதி போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. தொடரை கைப்பற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியா இரு அணிகளும் முழு முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், “இந்த தொடரை வெல்வது மிகவும் கடினமானது மற்றும் முக்கியமானதும் கூட. இந்த தொடரில் யார் வெற்றி பெற்றாலும் நிச்சயம் கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானது தான்.“
உமேஷ், குல்தீப் இருவரும் இதுவரை எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். நாங்கள் மிகவும் கடினமாக அவர்களை எதிர்கொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.
“இரண்டாவது போட்டியில் நங்கள் குல்தீப் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு ரன் குவித்தோம். அடுத்த போட்டியில் நங்கள் இன்னும் சிறப்பாக ஆடுவோம்.”
எங்களது எண்ணம் எல்லாம் தொடரை வெல்வது தன. தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடிப்பது குறித்து எங்களுக்கு கவலை எதுவும் இல்லை என கூறினார்.