இங்கிலாந்து அணிக்கு கிடைத்த தோனி இயன் மோர்கன்; தினேஷ் கார்த்திக் புகழாரம் !!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.

உலக கோப்பை தொடருக்கான போட்டி துபாய் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது கிட்டத்தட்ட அரையிறுதி சுற்று நெருங்கிவிட்டதால் அனைத்து அணிகளும் மிகவும் உத்வேகத்துடன் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் சதமடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தார்.

மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் ஆகிய இருவரின் சாதனையை முறியடித்து விட்டார். இவர் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு சர்வதேச டி20 தொடரில் 43 வெற்றிகளை பெற்று சர்வதேச டி20 தொடரில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் இலங்கை அணியை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது, இதற்கு கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை இங்கிலாந்து அணிக்கு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், எப்படி இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி இருந்தாரோ அதே போன்று தற்போது இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கன் சிறப்பாக தலைமை ஏற்று வழி நடத்தி வருகிறார் என்று இயான் மோர்கன் கேப்டன்ஷிப் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.

மேலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்க்கும் கிரிக்கெட் வட்டாரங்களில் பாராட்டு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.