இந்தியர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்த இயன் மார்கன் மற்றும் ஜோஸ் பட்லர்! கடுப்பான இந்தியர்கள்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஒல்லி ராபின்சன் இதற்கு முன்னர் ட்விட்டர் வலைதளத்தில் சில மோசமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். அது இந்திய ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கோபப்படுத்தியது. எட்டு வருடங்களுக்கு முன்னர் போட்ட பதிவுகள், தற்போது இவ்வளவு பெரிய சர்ச்சையாகி உள்ளதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் தான் அப்படிப்பட்ட ஒரு மனிதர் கிடையாது என்றும், தான் பதிவிட்ட அத்தனை பதிவுகளுக்கும் மன்னிப்பு கேட்பதாக கூறி மன்னிப்பும் கேட்டார் ராபின்சன்.

ஆனால் தற்போது மேலும் ஒரு சர்ச்சை எழுந்து உள்ளது அந்த சர்ச்சையில் தற்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரும் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக்குல்லம் சிக்கியுள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் மிக பெரிய சர்ச்சையாக இது பரவி வருகிறது.

இந்திய ஆங்கிலத்தை கிண்டலடித்து பேசிய மோர்கன், ஜோஸ் பட்லர் மற்றும் பிரண்டன் மெக்கல்லம்

இவர்கள் மூவரும் தங்களது பழைய பதிவுகளில் இந்திய ஆங்கிலத்தை கிண்டல் அடிப்பது போல் தங்களது பதிவுகளை பதிவு இட்டு இருக்கின்றார்கள். பொதுவாக இந்தியர்கள் அவர்களது பாணியில் ஆங்கிலத்தை உச்சரிப்பார்கள். அந்த பாணியை கிண்டலடித்து இவர்கள் மூவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிவிட்ட பதிவுகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் பரவியுள்ளது.

இவர்களது பதிவுகளை கண்ட இந்திய ரசிகர்கள் அதீத கோபத்தில் உள்ளனர். எப்படி இப்படி நடந்து கொள்ளலாம் என்றும் சீனியர் கிரிக்கெட் வீரராக இருந்து கொண்டு இவ்வாறு செய்வது சரியல்ல என்றும் இவர்கள் மீது கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.

மூவரும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்

இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியைச் சேர்ந்த சில வீரர்கள் இந்திய மரபு வழி ஆங்கிலத்தை கெடுத்து பேசியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய நிர்வாகத்திற்கு கட்டு பட்டு அவர் பேசி அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தாமாக மன்னிப்பு கேட்டார்கள்.

தற்பொழுது அதேபோல இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இவர்கள் மூவர் மீது விரைவாக ஆக்ஷன் எடுத்து இவர்கள் மூவரையும் மன்னிப்பு கேட்க வைக்கும் படி செய்யவேண்டும் இன்று இந்திய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜோஸ் பட்லர் மற்றும் மோர்கன் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இனி பல போட்டிகள் விளையாட வேண்டிய சூழ்நிலையில் இவர்களது நலன் கருதி விரைவில் இவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.