ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் கடந்த 25 ஆண்டுகளில் விளையாடிய சிறந்த டெஸ்ட் வீரர்களைக் கொண்ட கனவு அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த கனவு அணியைத் தேர்வு செய்த நடுவர்களில் இயன் சாப்பல், சஞ்சய் மஞ்சுரேக்கர், ஜான் ரைட், டேவ் வாட்மோர், மார்க் நிகோலஸ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் தங்களுக்கான கனவு லெவனை தேர்வு செய்து அனுப்ப அதிலிருந்தூ கலவையாக ஒரு கனவு அணியை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தேர்வு செய்துள்ளது, இதில் மேத்யூ ஹெய்டனுடன் தொடக்க வீரராகக் களமிறங்க இந்திய அதிரடி முச்சத மன்னன் விரேந்திர சேவாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 1, 1993 முதல் டிசம்பர் 31, 2017 வரை ஆடிய உலகின் தலைசிறந்த வீரர்களின் கனவு அணியைத் தேர்வு செய்துள்ளது கிரிக் இன்போ, இந்த அணிக்கு கேப்டன் யார் என்று பார்த்தோமானால் ஆச்சரியத்தக்க வகையில் அது ஷேன் வார்ன்.
தொடக்க வீரர்களாக மேத்யூ ஹெய்டன், விரேதிர சேவாக். ஹெய்டன் 103 டெஸ்ட்களில் 8625 ரன்களை 50.73 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 30 சதங்கள் 29 அரைசதங்கள், அதிகபட்ச ஸ்கோர் 380.
சேவாக்: 104 டெஸ்ட்கள், 8586 ரன்கள், சராசரி 49.34, ஸ்ட்ரைக் ரேட் 82.23, சிறந்த ஸ்கோர் 319 ( தெ.ஆ.வுக்கு எதிராக சென்னையில்), 23 சதங்கள் 32 அரைசதங்கள். பவுலிங் 40 விக்கெட்டுகள். சிறந்த வீச்சு 5/104. அதிவேக டெஸ்ட் முச்சதத்தின் சாதனையாளர் சேவாக், 278 பந்துகளில் முச்சதம் கண்டது இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
அதே போல் கடைசி 6 அதிவேக இரட்டைச் சதங்களில் சேவாக் 3 முறை வேகமாக இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார். ஒருமுறை இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்து தொடக்கத்தில் இறங்கி இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
அணியின் மற்ற வீரர்கள் வருமாறு: ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன் (கேப்டன்), கிளென் மெக்ரா, முத்தையா முரளிதரன்.
ஆனால் இந்தப் பட்டியலில் ராகுல் திராவிட், சங்கக்காரா, டிவில்லியர்ஸ், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெறாதது ஏமாற்றமே.
1. மேத்யூ ஹேடன்
103 டெஸ்ட் (ஸ்ட்ரைக் ரேட் 60.10) இருந்து 50.73 மணிக்கு 8625 ரன்கள்; அதிகபட்சம் : 380; 30 நூறு, 29 ஐம்பது