தலைசிறந்த கேப்டனை தேர்வு செய்து அறிவித்துள்ளது “ESPNcricinfo”
இங்கிலாந்தை முதல் முறையாக ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை சாம்பியன்களாக்க வழிநடத்திய கேப்டன் இயான் மோர்கன் ஆண்டின் சிறந்த கேப்டனாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தேர்வு செய்துள்ளது.
அதே உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்ற பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் சிறந்த டெஸ்ட் இன்னிங்சிற்கான விருதை ஸ்டோக்ஸ் நூலிழையில் தவற விட்டார், காரணம் டர்பனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பிரமாதமாக ஆடி இலங்கையை வெற்றிக்கு இட்டுச் சென்ர குசால் பெரேராவின் 153 நாட் அவுட்டுக்காக விருது இவருக்குச் சென்றது.
அந்த இன்னிங்ஸில் இலங்கை அணி 52/3 என்று திணறியது, வெற்றி பெற வேண்டிய இலக்கோ 304 ரன்கள். 9 விக்கெட்டுகள் விழுந்தன 78 ரன்கள் தேவை. பெரேரா அப்போதுதான் ஆகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை ஆடி வெற்றிக்கு இட்டுச் சென்றா, ஆகவே சிறந்த பேட்டிங் விருது குசல் பெரேராவுக்குச் சென்றது.
ஆண்டின் சிறந்த அறிமுக வீரர் விருதை இங்கிலாந்தின் புதுமுக வேகப்புயல் ஜோப்ரா ஆர்ச்சர் தட்டிச் சென்றார்.
இந்திய அணியை வெளியேற்றிய பவுலிங் ஸ்பெல்லில் உலகக்கோபை அரையிறுதியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேட் ஹென்றி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பவுஅல்ர் விருதைத் தட்டிச் சென்றார்.
மெக் லானிங் மற்ரும் எலிஸி பெர்ரி ஆகியோர் மகளிர் கிரிக்கெட் பேட்டிங் மற்றும் பவுலிங் விருதைத் தட்டிச்சென்றனர்.