இன்னும் எனக்கு வாய்ப்புகள் இருக்கு , நம்பிக்கையை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே !!

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அஜிங்கியா ரஹானே ரஞ்சி கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பாக செயல்பட்டதை எல்லாம் மறந்துவிட்டு குறையை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் அஜிங்கிய ரஹானே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியை தலைமை தாங்கி இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை செய்வதற்கு உதவியாக இருந்துள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்படும் திறமை படைத்த ரஹானே ஆஸ்திரேலியா தொடருக்குப் பின் அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை, இதன் காரணமாக கிரிக்கெட் விமர்சகர்களால் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். இருந்தபோது இவரின் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கி வந்தது.

ககடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் மிக மோசமாக செயல்பட்டதால் இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ள ரகானே தனக்கு இன்னும் சில வாய்ப்புகள் உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் என்னுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தது அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது, அதில் சில போட்டிகளில் என்னுடைய பங்களிப்பை கொடுத்தேன், ஆனால் ஒட்டுமொத்தமாக நான் சிறப்பாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன், எப்பேர்பட்ட வீரராக இருந்தாலும் இதுபோன்ற ஒரு நிலைமையை சந்தித்துதான் ஆகவேண்டும், தற்பொழுது நான் அந்த மோசமான நிலையில் இருக்கிறேன். ஆனால் இது நிரந்தரமாக இருக்காது இதிலிருந்து மீண்டு வந்து சிறப்பாக செயல்படுவேன். இந்த இக்கட்டான நிலையிலிருந்து நான் ஓடி வழியவில்லை அதற்கு பதிலாக அதை எதிர்கொண்டு வெற்றி பெற முயற்சி செய்கிறேன். இன்னும் என்னிடம் சில கிரிக்கெட் உள்ளது, தற்போது என்னுடைய கவனம் டெஸ்ட் தொடர் மற்றும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் உள்ளது, இருந்தபோதும் தற்பொழுது என்னுடைய முழு குறிக்கோள் எல்லாம் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது மட்டுமே என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.