ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான டி-20 தொடரை அடுத்து இந்த பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டாக்காவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லெவிஸ், ஷாய் ஹோப் இறங்கினர்.இதில் லெவிஸ் அதிரடி காட்டினார். அவர் 36 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவருக்கு ஷாய் ஹோ சிறிது ஒத்துழைப்பு கொடுத்து 23 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். நிகோலஸ் பூரன் 29 ரன்னில் அவுட்டானார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்காள தேசம் சார்பில் ஷாகிப் அக் ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான், மொகமதுல்லா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியில் லித்தன் தாஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி வங்காள தேச வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், வங்காள தேசம் அணி 17 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பவுல் 5 விக்கெட்டும், பேபியன் ஆலன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 50 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2 – 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது
அணி தரவரிசை
ரேங்க் | நாடு | புள்ளிகள் |
1 | பாகிஸ்தான் | 138 |
2 | இந்தியா | 126 |
3 | இங்கிலாந்து | 118 |
4 | ஆஸ்திரேலியா | 117 |
5 | தென் ஆப்பிரிக்கா | 114 |
6 | நியூசிலாந்து | 112 |
7 | மேற்கிந்திய தீவுகள் | 100 |
8 | ஆப்கானிஸ்தான் | 92 |
9 | இலங்கை | 87 |
10 | வங்க தேசம் | 78 |
முதல் 10 பேட்ஸ்மென்
ரேங்க் | பெயர் | நாடு | மதிப்பீடு |
1 | பாபர் ஆசாம் | பாகிஸ்தான் | 858 |
2 | சி. மன்ரோ | நியூசிலாந்து | 815 |
3 | ஏ.ஜே பிஞ்ச் | ஆஸ்திரேலியா | 806 |
4 | ஈ. லூயிஸ் | மேற்கிந்தியத் | 751 |
5 | பகர் ஜமான் | பாகிஸ்தான் | 749 |
6 | ஜி.ஜே.மேக்ஸ்வெல் | ஆஸ்திரேலியா | 745 |
7 | KL ராகுல் | இந்தியா | 719 |
8 | எம்.ஜே. குப்தில் | நியூசிலாந்து | 703 |
9 | AD ஹேல்ஸ் | இங்கிலாந்து | 697 |
10 | ஆர்ஜி ஷர்மா | இந்தியா | 689 |
முதல் 10 பந்து வீச்சாளர்கள்
ரேங்க் | பெயர் | நாடு | மதிப்பீடு |
1 | ரஷீத் கான் | ஆப்கன் | 793 |
2 | ஷாத் கான் | பாகிஸ்தான் | 752 |
3 | குல்தீப் யாதவ் | இந்தியா | 714 |
4 | AU ராஷித் | இங்கிலாந்து | 676 |
5 | ஏ ஜம்பா | ஆஸ்திரேலியா | 670 |
6 | ஐ.எஸ். சோதி | நியூசிலாந்து | 668 |
7 | ஷகிப் அல் ஹசன் | வங்க தேசம் | 658 |
8 | பாகீஷ் அஷ்ரஃப் | பாகிஸ்தான் | 652 |
9 | இமாத் வாசிம் | பாகிஸ்தான் | 651 |
10 | இம்ரான் தாஹிர் | எஸ்.ஏ. | 640 |
முதல் 10 ஆல்-ரவுண்டர்ஸ்
ரேங்க் | பெயர் | நாடு | மதிப்பீடு |
1 | ஜி.ஜே.மேக்ஸ்வெல் | ஆஸ்திரேலியா | 362 |
2 | ஷகிப் அல் ஹசன் | வங்க தேசம் | 339 |
3 | முகம்மது நபி | ஆப்கானிஸ்தான் | 314 |
4 | மஹ்மதுல்லா | வங்க தேசம் | 241 |
5 | ஜே.பி. டுமினி | எஸ்.ஏ. | 217 |
6 | NLTC பெரேரா | எஸ்.எல் | 213 |
7 | PR ஸ்டிர்லிங் | அயர்லாந்து | 208 |
8 | RD பெர்லிங்டன் | ஸ்காட்லாந்து | 203 |
9 | SC வில்லியம்ஸ் | ஜிம்பாப்வே | 198 |
10 | முகமது ஹபீஸ் | பாகிஸ்தான் | 193 |