ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மரணம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ப்ரூஸ் யார்ட்லி புற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளரான அறிமுகமான ப்ரூஸ் யார்ட்லி, வெகு சில போட்டிகளிலேயே தனது பவுலிங் ஸ்டைலை மாற்றி சுழற்பந்து வீச்சாளராக அவதாரம் எடுத்தவர். ஆஸ்திரேலிய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ப்ரூஸ் யார்ட்லி 1978ம் ஆண்டில் இருந்து 1983ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 126 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த போது ஓய்வு பெற்ற ப்ரூஸ் யார்ட்லி அதன் பிறகு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றில் விளையாடி வந்தார்.
இது தவிர டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்துள்ள யார்ட்லின் அதிகபட்ச ஸ்கோர் 74 ஆகும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ப்ரூஸ் யார்ட்லி, புற்றுநோயில் இருந்து விடுபட தொடர்ந்து பாடுபட்டு வந்த யார்ட்லி மேற்கொண்ட அனைத்து மருத்துவ முறைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் இன்று அவர் இயற்கை ஏய்தியுள்ளார்.