பெண் குழந்தைக்கு தந்தையானார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா
இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நாயகனான புஜாராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருப்பவர் புஜாரா. இவருக்கும் பூஜாவிற்கும் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்திய அணி ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் பங்கேற்ற புஜாரா, தனது மனைவியுடன் தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அங்கு மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடினார்.
அப்போது ‘‘தனது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது’’ என்று டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
தற்போது புஜாரா சவுராஷ்டிரா அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி வருகிறார். நேற்று பரோடா அணியை வீழ்த்தி சவுராஷ்டிரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த சந்தோசத்தில் இருக்கும் புஜாராவிற்கு மற்றொரு இரட்டிப்பு சந்தோசம் ஏற்படும் வகையில் நேற்று பெண்குழந்தை பிறந்துள்ளது. இதை புஜாரா டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.