அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்…? காரணம் வெளியாகியுள்ளது !!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மட்டும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஏன் நீக்கப்பட்டார் என்ற காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.


இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 16ம் தேதி நடைபெற உள்ளது.



இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி நட்சத்திர ஆல்ரவுண்டர் அஸ்வினை தேர்ந்தெடுக்கவில்லை, இதற்கு முக்கிய காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வினின் பந்து வீச்சு அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்பதன் காரணமாகத்தான் பிசிசிஐ இந்த முடிவு எடுத்துள்ளது என்று சிலர் பேசி வந்தனர்.

2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் லிமிடெட் ஒரு போட்டிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த அஸ்வின் 2021 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக மீண்டும் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை இதன் காரணமாகத்தான் பிசிசிஐ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இவரை நீக்கி விட்டது என்று பேசி நிலையில் உண்மையான காரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கேப்டன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வினின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது இதன் காரணமாகத்தான் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இதில் அஸ்வினின் காயம் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்தான விரிவான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் அஸ்வினுக்கு பதில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.