டெஸ்ட் போட்டிக்கான உலககோப்பை அறிவிப்பு: எத்தனை புள்ளிகள்? என்ன விதி? எப்போது துவக்கம்! முழு விவரம் உள்ளே!

SYDNEY, AUSTRALIA - JANUARY 07: Virat Kohli and The Indian Cricket Team celebrate winning the Border Gavaskar trophy during day five of the fourth Test match in the series between Australia and India at Sydney Cricket Ground on January 07, 2019 in Sydney, Australia. (Photo by Mark Evans/Getty Images)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை பரபரப்பு அடங்குவதற்குள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்க இருக்கிறது. ஆனால், இது ஒரே மூச்சாக நடத்தப்படாமல் 2 ஆண்டுகள் வரையிலும் நிதானமாக நடத்தப்பட உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. 2019-ம் ஆண்டுமுதல் 2021-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகளில் 9 அணிகள் மட்டும் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.  வழக்கமாக ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. ஆனால், இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. 2019-ம் ஆண்டுமுதல் 2021-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகளில் 9 அணிகள் மட்டும் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.  வழக்கமாக ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. ஆனால், இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.

ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும். ஒரு அணி அதிகபட்சமாக 6 தொடர்கள் மூலம் 720 புள்ளிகள் பெற முடியும்.

புள்ளிகள் கணக்கீடு எப்படி?

2 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள் வீதம் 2 போட்டிகளுக்கு 120 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி “டை”யில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 30 புள்ளிகளும். முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தால் தலா 20 புள்ளிகளும் வழங்கப்படும்
1.    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகளும், “டை”யில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 20 புள்ளிகளும். முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தால் தலா 13.3 புள்ளிகளும் வழங்கப்படும்
2.    4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 30 புள்ளிகளும், “டை”யில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 15 புள்ளிகளும். முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தால் தலா 10 புள்ளிகளும் வழங்கப்படும்
3.    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் வெற்றி பெறும் அணிக்கு 24 புள்ளிகளும், “டை”யில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 12 புள்ளிகளும். முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தால் தலா 8 புள்ளிகளும் வழங்கப்படும்.
4.    அதிகமான புள்ளிகளைப் பெறும் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் மோதும்.

(Photo Source: Getty Images)

இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளின் பட்டியல்

  1.  2019-ஆகஸ்ட்-செப். மாதங்களில் மே.இ.தீவுகள் செல்லும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது
  2.   2019, அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்து, 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் மோதுகிறது.
  3.  2019, நவம்பர் மாதம் வங்கதேசம் அணி இந்தியாவுக்கு பயணம் செய்கிறது. இங்கு இந்திய அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
  4.  2020, பிப்ரவரி மாதம், நியூஸிலாந்து செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
  5. 2020 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செல்லும் இந்திய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
  6.  2021 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது இங்கிலாந்து. இந்திய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி மோதுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.