இந்தியாவை தொடர்ந்து போட்டு தாக்கும் டு பிளசிஸ்!!

தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டூபிளிசிஸ் இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டர்பன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டூபிளிசிஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். டூபிளிசிஸ் ஒரு கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

27.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து தடுமாறியது. அந்த நேரத்தில் டூபிளிசிஸ் நிதானமாக விளையாடி விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டதோடு, ரன்களையும் சீரான வேகத்தில் சேர்த்தார்.

Faf du Plessis(c) of South Africa celebrates his fifty runs during the 1st One Day International match between South Africa and India held at Kingsmead Cricket Ground in Durban on the 1st feb 2018 Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS

கடைசி ஓவர் வரை விளையாடி சதமடித்தார். 112 பந்துகளில் 120 ரன்கள் குவித்து 49.2வது ஓவரில் ஆட்டமிழந்தார். டூபிளிசிஸ் ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி 269 ரன்கள் குவித்தது.

டூபிளிசிஸ் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவுக்கு எதிராக கடைசி 8 ஆட்டங்களில் முறையே 55, 62, 51, 60, 17, 133*, 36, 120(இன்று) ரன்கள் குவித்துள்ளார்.

Faf du Plessis(c) of South Africa hits over the top for six during the 1st One Day International match between South Africa and India held at Kingsmead Cricket Ground in Durban on the 1st feb 2018 Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS

அதேபோல், டூபிளிசிஸ் கடைசியாக விளையாடிய அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாகவே ரன்களை குவித்து வருகிறார். தனது கடைசி 11 இன்னிங்சில் 81, 135*, 0, 91*, 62, 0, 63, 48, 8, 2, 120 ரன்கள் குவித்துள்ளார். ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் டூபிளிசிஸ் அசத்தி வருகிறார்.

Editor:

This website uses cookies.