ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா போன்ற வீரர்களின் இடத்தை ஒரே இரவில் நிரப்ப முடியாது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்துள்ளது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. முதல் டெஸ்ட்டில் 203 ரன்கள் வித்தியசாத்தில் தென்னாப்பிரிக்கா தோற்ற நிலையில், இன்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் மட்டுமின்றி இன்னிங்ஸ் தோல்வியும் அடைந்துள்ளது.
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
இதுதொடர்பாக பேட்டியளித்த டூ பிளசிஸ், ‘அனுபவம் இன்மையால் இது நடந்துள்ளது. இந்திய அணியிடம் அதிக அனுபவம் உள்ளது. இந்திய வீரர்கள் மிகுந்த அனுபவம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் நாங்கள் அனைத்து அனுபவ வீரர்களும் இல்லாத நிலையில் உள்ளோம். டேல் ஸ்டெயின், மோர்னோ மார்கல், ஹாசிம் அம்லா, ஏபி டி வில்லியர்ஸ் இவர்கள் அனைவரும் மிகுந்த அனுபவம் கொண்டவர்கள். இவர்களின் இடத்தை ஒரே இரவில் நிரப்பிவிட முடியாது” என்று கூறினார்.
இது குறித்து கோலி கூறியதாவது..
கேப்டன் பொறுப்புடன் கூடுதலாக சுமை உள்ளதால், அணியின் நலன் குறித்தே சிந்திக்கிறேன். இதனால் மன அழுத்தம் மறைகிறது. தற்போதைய நிலையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அணிக்கு என்னால் உதவ முடிவது திருப்தி தருகிறது. அணியை ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் வைத்திருப்தே சிறந்த செயலாகும். புதிய பந்தை எதிர்கொண்டு ஆடுவதை குறிக்கோளாக கொண்டிருந்தேன்.
ரஹானேவுடன் இணைந்து ஆடியது சிறப்பாக இருந்தது. இருவரும் சிறந்த தகவல் பரிமாற்றத்துடன் ஆடியதால் சிறந்த இணையாக உள்ளோம் கடந்த 3, 4 ஆண்டுகளாக அனைத்து வீரர்களும் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்த முனைகின்றனர். சாஹா சிறப்பாக பார்முக்கு திரும்பியுள்ளார். அஸ்வினும் தனது திறமையை நிரூபித்துள்ளார். 3-ஆவது டெஸ்டையும் வென்று தொடரை 3-0 என கைப்பற்றுவதே மகிழ்ச்சி என்றார்.