ஆசியக் கண்டத்தில் தொடர்ச்சியாக 9 முறை டாஸ் தோற்ற விரக்தியில், நாளைய போட்டியின்போது மாற்று வீரரை டாஸ் கேட்க அனுப்புகிறாராம் டு பிளிசிஸ்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆசிய கண்டத்தில் விளையாடும்போது டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்லது மிகமிக முக்கியமானது. டாஸ் வென்று முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெற்றியை எளிதாக்கி விடலாம். ஆனால், இந்தியாவிற்கு எதிராக டு பிளிசிஸ் இரண்டு போட்டிகளிலும் டாஸ் தோற்றார்.
ஆசிய கண்டத்தில் அவரது டாஸ் தோல்வி புனே டெஸ்டுடன் ஒன்பதாகும். நாளைய ராஞ்சி டெஸ்டிலும் தோற்றாலம் பத்தாகிவிடும். தனக்கு அதிர்ஷ்டம் கைக்கூடவில்லை. அதனால் டாஸ் கேட்க மாற்று வீரரை அனுப்பி வைக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘அநேகமாக டாஸ் கேட்ட நான் வேறு யாரையாவது ஒருவரை அனுப்புவேன். ஏனென்றால், ஆசியக் கண்டத்தில் டாஸ் ஜெயிப்பதில் எனக்கு சிறப்பான ரெகார்டு இல்லை. டாஸ் வென்று முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்து விட்டால், 2-வது இன்னிங்ஸ் அதன் வழியேச் செல்லும்’’ என்றார்.
இந்நிலையில்,
மணிக்கட்டு முறிவு காயம் காரணமாக ராஞ்சி டெஸ்டில் இருந்து விலகினாா் தென்னாப்பிரிக்க தொடக்க வீரா் எய்டன் மாா்க்ரம்.
உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகள் இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில் 2 ஆட்டங்களை இந்தியா வென்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது.
கடந்த வாரம் புணேயில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டில் மாா்க்ரமுக்கு மணிக்கட்டு பகுதியில் முறிவு ஏற்பட்டது. அவுட்டானதால் ஏற்பட்ட வேதனையை மாா்க்ரம் வெளிப்படுத்தியபோது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால் மூன்றாவது டெஸ்டில் அவா் ஆட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு டெஸ்ட்களிலும் மாா்க்ரம் பேட்டிங் குறிப்பிடும்படியாக அமையவில்லை. எனது செயல்பாட்டுக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். அணியிடம் எனது மன்னிப்பை கோருகிறேன் எனக்கூறியுள்ளாா் மாா்க்ரம்.
ஏற்கெனவே முதன்மை சுழற்பந்து வீச்சாளா் கேசவ் மகராஜ் காயம் காரணமாக விலகியுள்ளாா். இரு முக்கிய வீரா்கள் விலகியுள்ளது தென்னாப்பிரிக்க அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.